3வது முறையாக பதவியை தக்கவைத்த மோடி – 8 ஆம் திகதி பதவியேற்பு!

3வது முறையாக பதவியை தக்கவைத்த மோடி – 8 ஆம் திகதி பதவியேற்பு!

இந்திய லோக் சபா தோ்தல் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும். பதவியேற்பு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.

இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.

இந்நிலையில், மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை நடைபெற உள்ளது.

முன்னதாக, பா.ஜ.க. தலைமையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளனர்.

அதன்பின், வரும் 8 ஆம் திகதி மாலை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்கான மரத்தான் ஓட்டத்தில் ஆறு வாரங்களில் ஏழு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

BJP தலைமையிலான NDA 292 இடங்களை வென்று 232 இடங்களைக் கைப்பற்றிய எதிர்க்கட்சி கூட்டணியான இ-ன்-டி-யா-வை விட வெற்றி பெற்றது.

இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்திய கூட்டணியின் முன்னோக்கிய பயணத்தில் இன்று முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது.

பாரதீய ஜனதா மற்றும் இந்திய கூட்டணிக்கு இடையேயான போட்டி ஒரு பரந்த கருத்தியல் போரின் பிரதிபலிப்பாகும்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஆனால் பாஜகவிற்கு அவரது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவு முக்கியமாக தேவைப்படும் -- நிதிஷ் குமாரின் ஜேடி (யு) மற்றும் சந்திரபாபு நாயுடுவின் டிடிபி ஆகியவற்றின் ஆதரவும் அவசியமாகும்.