குடியுரிமை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு - அண்ணாமலை

குடியுரிமை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு - அண்ணாமலை

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் விடயத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளிப்படுத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தை இந்திய மத்திய அரசு அண்மையில் அமுல்படுத்தியிருந்தது. இதனையடுத்து குறித்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு கருத்தாடல்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சட்டத்துக்கு அமைய, 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவில் தஞ்சமடைந்த இஸ்லாமியர்கள் அல்லாத ஏனைய தரப்பினர் தங்களுக்கான குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த சட்டத்தின் ஊடாக பாதிப்பு ஏற்படுவதாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.

அத்துடன் தமிழகத்தில் அதன் விதிகளை அமுல்படுத்தப் போவதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, குடியுரிமை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக தெரிவித்துள்ளார்.