நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.