ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு 3 புதிய நியமனங்கள்!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு 3 புதிய நியமனங்கள்!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனமானது 3 புதிய பதவிகளுக்கு நியமனம் அளித்துள்ளது. 

இதற்கமைய தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அனுஷ சமரநாயக்க என்பவரும், விளையாட்டு ஊக்குவிப்பு நிபுணராக ஜொனாதன் போர்ட்டர் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மனநல ஆலோசகராக வைத்தியர் ஹசன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.