உலகக் கிண்ண இறுதிப் போட்டி: முதலாவது பவர்பிளே நிறைவு!
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி தமது முதலாவது பவர்பிளேவில் 02 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா 47 ஓட்டங்களுடனும், சுப்மன் கில் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சென்றனர். T இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 8 நான்கு ஓட்டங்களை பெற்றிருந்தால் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1,000 நான்கு ஓட்டங்களை கடந்திருப்பார்.
எனினும் இன்றைய போட்டியில் அவர் 4 நான்கு ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.
அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
முதலாவது பவர்பிளேவில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹெசில்வூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.