பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 46 நாடுகளின் படையினரைக் கோரும் பிரான்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 46 நாடுகளின் படையினரைக் கோரும் பிரான்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக ஆயி­ரக்­க­ணக்­கான பாது­காப்பு அதி­கா­ரி­களை அனுப்­பு­மாறு தனது நட்பு நாடு­க­ளிடம் பிரான்ஸ் கோரி­யுள்­ளது. 

ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக 46 நாடு­க­ளி­ட­மி­ருந்து 2,185 பொலி­ஸாரை அனுப்­பு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது என பிரெஞ்சு உள்­துறை அமைச்சு அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார். 

கடந்த ஜன­வரி மாதம் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­கவும் 35 நாடுகள் சாத­க­மாக பதி­ல­ளித்­துள்­ள­தா­கவும் பிரெஞ்சு அர­சாங்க வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை­பெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்­டிகள் மற்றும் ஆகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் 8 வரை நடை­பெறும் பரா­லிம்பிக் போட்­டி­க­ளின்­போது தினந்­தோறும் 45,000 பிரெஞ்சு பொலி­ஸாரை பணியில் அமர்த்த பிரான்ஸ் திட்­ட­மிட்­டுள்­ளது. 20,000 தனியார் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், 15,000 படை­யி­னரையும் சேவையில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

எனினும், முக்­கிய சர்­வ­தேச விளை­யாட்டு விழாக்­களில் வெளி­நாட்டுப் படை­யி­னரை ஈடு­ப­டுத்­து­வது வழக்­க­மா­னது.

2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­காக கட்­டா­ருக்கு 200 பொலிஸாரை பிரான்ஸ் அனுப்­பி­யி­ருந்­தது. கடந்த வருட உலகக் கிண்ண றக்பி போட்டிகளின்போது  ஐரோப்பிய நாடுகளிலிருந்து 160 படையினரை பிரான்ஸ் வரவேற்றிருந்தது.