சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும். 

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.

அதேவேளை, 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபாவாகும்.