இலங்கையின் தெற்காக நகர்ந்து வரும் காற்றுச் சுழற்சி - 11ஆம் திகதிவரை கனமழை தொடரும்!
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக நிலைகொண்டுள்ளது.
இது மாலைதீவு கடற்பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் இன்றும் நாளையும் அசாதாரண காலநிலை தொடரும்.
இந்த காற்று சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும்.
நாளை மறுதினம் (11) முதல் மழைக்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே உள்ளது. (பெரும்பாலும் 11ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு மழை இல்லை).
இதேபோன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் மழைக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
அதேவேளை வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று ஓரளவு மழைக்கு சாத்தியம் உள்ளது.
இதேவேளை எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையை நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினாலும் இக்காலப் பகுதிகளில் ஓரளவு மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:
அம்பாறை மாவட்டம்:
பொத்துவில் -73.8mm,
அம்பாறை - 83.8mm,
இக்கினியாகலை -133.5mm,
எக்கல் ஓய - 94.0mm,
பன்னலகம 96.7mm,
மகா ஓய 43.7mm,
பாணமை 79.1mm,
லகுகல 71.2mm,
திகவாவி 104.2mm,
அக்கரைப்பற்று 108.2mm,
இலுக்குச்சேனை 100.8mm,
சாகமம் 92.0mm,
றூபஸ்குளம் 270.0mm,
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 80.6mm.
மட்டக்களப்பு மாவட்டம்:
மட்டக்களப்பு நகர் 123.3mm,
உன்னிச்சை 68.0mm,
உறுகாமம் 79.0mm,
வாகனேரி 80.4mm,
கட்டுமுறிவுக் குளம் 39.0mm,
கிரான் 126.1mm,
நவகிரி 66.0mm,
தும்பன்கேணி 47.0mm,
மைலம்பாவெளி 131.0mm.
ஆயித்தியமலை 136.0mm.
திருகோணமலை மாவட்டம்:
திருகோணமலை 85.8mm,
கடற்படைத்தளம் 90.0mm,
குச்சவெளி 73.4mm,
பாலம்பட்டாறு na,
கந்தளாய் 51.2mm.
வட மாகாணம்:
யாழ் மாவட்டம்:
யாழ்ப்பாணம் 46.3mm,
அச்சுவேலி 59.4mm,
பருத்தித்துறை na,
நயினாதீவு 11.5,
நீர் வழங்கல் நிலையம் 36.9mm,
நீர்ப்பாசன திணைக்களம் 30.8mm,
நெடுந்தீவு 0.3mm,
ஆணையிறவு 33.9mm,
சாவகச்சேரி 44.3mm,
தெல்லிப்பழை 32.9,
அம்பன் 24.0mm,
கிளிநொச்சி மாவட்டம்:
கிளிநொச்சி 42.2mm,
இரணைமடுக்குளம் 77.8mm.
முல்லைத்தீவு மாவட்டம்:
முல்லைத்தீவு 24.9mm,
அலம்பில் 121.5mm,
ஒட்டுசுட்டான் 56.7mm,
வள்ளிபுனம் 23.5mm.
மட்டக்களப்பு மாவட்டம் :- வெள்ள நிலவர அறிக்கை 09.01.2024
1. மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
2. கிரான் பி.செ பிரிவு (KPS) - புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிப்பு - படகுசேவைகள் 02 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
2. செங்கலடி பி.செ பிரிவு (EP) - ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்து பாதிப்பு - படகுசேவைகள் 02 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
3. வாகரை (KPN) - ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து பாதிப்பு உழவு இயந்திர சேவை 01 மற்றும் படகுசேவை 01 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு