யாழ்லில் வாள்வெட்டு: இளைஞரின் விரல் துண்டிப்பு

யாழ் கொக்குவில் பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த களஞ்சியசாலையில் இருந்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதலில் விரல் துண்டாக்கப்பட்ட இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.