2025 சாம்பியன்ஸ் டிராபி; முதல் அரையிறுதிப் போட்டி இன்று!

2025 சாம்பியன்ஸ் டிராபி; முதல் அரையிறுதிப் போட்டி இன்று!

துபாயில் இன்று (04) நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி 02.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

2025 சாம்பியன்ஸ் டிராபி சீசனில் இதுவரை தோல்வியை சந்திக்காத ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி குழு ஏ யில் முதலிடத்தை பிடித்ததுடன், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான காயமடைந்த அவுஸ்திரேலியாவுடனான மோதலுக்கு வழிவகுத்தது.

2023 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்னர் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதும் முதல் மோதலாக இது இருக்கும்.

2025 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை வீழ்த்தி, பின்னர் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை தோற்கடித்தது.

அதேநேரம், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்படுவதற்கு முன்பு, அவுஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.

இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இதுவரை 151 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 57 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, 84 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 10 போட்டிகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

சாம்பியன்ஸ் டிராபியில், இரு அணிகளுக்கு இடையிலும் நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அவற்றில் இந்தியா 2 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனிலையில் முடிந்தது.