சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது குஜராத் டைட்டன்ஸ்

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 51ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்று சன்ரைசர்ஸ் அணிக்கு 225 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோலவியடைந்தது