IPL- மேலும் 2 போட்டிகள் இன்று!

IPL- மேலும் 2 போட்டிகள் இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று [23] இடம்பெறவுள்ளன.

இதன்படி முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி மகாராஜா யத்விந்தர் சிங் மைதானத்தில் பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, மற்றுமொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

கொல்கத்தாவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Update 

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறுகின்றது.

குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.

இதற்கமைய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.