பரம கிரிக்கெட் எதிரிகள் இந்தியா - பாகிஸ்தான் சமர் இன்று!

2023 - உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

பரம கிரிக்கெட் எதிரிகள் இந்தியா - பாகிஸ்தான் சமர் இன்று!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த போட்டி  ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விசேட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இதுவரையில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.  7 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்தநிலையில் 246 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.