பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி அவரது பதவிக்காலம் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் பதவி காலம் கடந்த மார்ச் 25ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் தொடர்ந்து நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.