ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
![ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ab5973a86c1.jpg)
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு 16 பேர் கொண்ட அணியை !ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டியையும், பெப்ரவரி 14 ஆம் திகதி இரண்டாவது ஒருநாள் போட்டியையும் நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகளும் இலங்கை நேரப்படி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கை அணி விபரம்:
சரித அசலங்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டீஸ், கமிந்து மெண்டீஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷங்க, நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, ஜெப்ரி வெண்டர்சே, அஷித பெர்னாண்டோ, லஹிரு குமார, மொஹமட் சிராஸ் மற்றும் எஷான் மலிங்க.