தமையனை விஞ்சிய  இளையவன் - ஒரே நாளில் விராட் கோஹ்லி 3 சாதனைகள்!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மூன்று சதங்களை பெற்றதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.

மும்பை - வான்கடே சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்தநிலையில், ஒருநாள் போட்டிகளில் 50 ஒருநாள் சதங்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோஹலி பதிவுசெய்துள்ளார்.

குறித்த போட்டியில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக அரைசதங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும், அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும் விராட் கோஹலி படைத்துள்ளார்.

இதனூடாக விராட் கோஹலி சச்சின் டெண்டுல்கரின் 3 சாதனைகளை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.