2025 மாஸ்டர்ஸ் லீக்; இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று!

குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணி, இன்று (14) ராய்ப்பூரில் நடைபெறும் 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இன் இரண்டாவது அரையிறுதியில் பிரையன் லாராவின் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கை மாஸ்டர்ஸ் அணி ஐந்து லீக் ஆட்டங்களில் எட்டு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும், இந்தியாவை விட சிறந்த நிகர ரன் விகிதத்தையும் பெற்றது.
மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் (16) இறுதிப் போட்டியில், முதல் அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியாவை எதிர்கொள்ளும்.