இலங்கை அணி 133 ஓட்டங்களால் வெற்றி!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 133 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 133 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.
இதற்கமைய, அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 52 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 19 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 324 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 57 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் தனஞ்சடி சில்வா 03 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 03 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 07 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.