புதிய சாதனை படைத்த எம்.எஸ்.தோனி !

புதிய சாதனை படைத்த எம்.எஸ்.தோனி !

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரிட்சை நடாத்தின. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சென்னை சூப்பர் கிங்சின் தலைவரும், விக்கெட் காப்பாளருமான டோனி நேற்றைய ஆட்டத்தில் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.-ல் விக்கெட் காப்பாளராக ஆட்டமிழக்கச் செய்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200 முறை ஸ்டம்பிங் செய்த முதல் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.

இந்நிலையில், இந்த போட்டியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் தோனி மற்றொரு சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் தோனி 11 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த போட்டியில் தோனி ஆட்டநாயகரான அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதுபெற்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். 43 ஆண்டுகள் 281 நாட்கள் வயதான தோனி ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.

இதற்குமுன்பாக அதிக வயதில் ஆட்டநாயகன் விருதுபெற்றவராக பிரவீன் தாம்பே இருந்தார். 43 ஆண்டுகள் 60 நாட்கள் என்ற வயது பிரிவில் பிரவீன் தாம்பே ஆட்டநாயகன் விருதுபெற்றதே அதிக வயதான வீரர் ஆட்டநாயகன் விருது பெற்றதாக இருந்தது. அவருக்கு அடுத்தபடியாக ஷேன் வார்ன் (41 ஆண்டுகள் 223 நாட்கள்) வயதிலும், ஆடம் கில்கிறிஸ்ட் (41 ஆண்டுகள்) கிறிஸ் கெயில் (41 ஆண்டுகள் 35 நாட்கள்) வயதிலும் ஆட்டநாயகன் விருது பெற்றவர்களாக இருந்தனர். தற்போது, நேற்றைய ஆட்டநாயகன் விருது மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட வரலாற்றில் அதிக வயதில் ஆட்டநாயக விருதுபெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை தோனி படைத்துள்ளார்.

அதேநேரம் இப் போட்டியில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி, ஜடேஜா பந்துவீச்சில் தோனியால் ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றப்பட்டார். ஐ.பி.எல். வரலாற்றில் ஜடேஜா பந்துவீச்சில் தோனி ஸ்டம்பிங் செய்து ஒரு வீரரை ஆட்டமிழக்க வைப்பது இது 9-வது முறையாகும். இப்படி நேற்றைய போட்டியில் அணித்தலைவர் பல சாதனைகளை படைத்தமை குறிப்பிடதக்கது.

Related