பிரபல அவுஸ்திரேலிய வீரர் ஓய்வு!

பிரபல அவுஸ்திரேலிய வீரர் ஓய்வு!

டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்ட வீரரான மெத்யூவ் வேட் தெரிவித்துள்ளார்.

Sheffeield Shield தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர் அவர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெத்யூவ் வேட் 1613 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதில் 4 சதங்களும் 5 அரை சதங்களும் உள்ளடங்குகின்றன.