ஐபிஎல் விதிகளில் புதிய மாற்றங்கள் - பிசிசிஐ வைத்த செக்

ஐபிஎல் விதிகளில் புதிய மாற்றங்கள் - பிசிசிஐ வைத்த செக்

ஐபிஎல் 2024 தொடர் நாளை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள  ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதனிடையே ஐபிஎல் 2024 தொடரில் புதிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் தொடர்கள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் இரு பவுன்சர்கள் வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடைசி ஓவர்களை வீச வரும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதேபோல ஒரு பேட்ஸ்மேன் ஸ்டெம்பிங் ஆனாரா என மூன்றாவது நடுவர் முடிவு எடுக்கும்போது, முதலில் அவர் கேட்ச் ஆனாரா என சரிபார்க்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை போல Wide, no ball போன்றவைகளையும் அணிகள் விமர்சனம் செய்யலாம் என்றும், ஒரு இன்னிங்சில் ஓர் அணிக்கு 2 Review வழங்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், ஐசிசி புதிதாக அமல்படுத்தியுள்ள Stop Clock முறை ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தவில்லை எனவும் பிசிசிஐ கூறியுள்ளது.