காவல்துறை அதிகாரியான கிரிக்கெட் வீரர்கள்!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு கிரிக்கெட் வீரர்கள் இன்று (06) காவல்துறை திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
சாமர சில்வா, குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் அஷேன் பண்டார ஆகியோரே இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமர சில்வா, குசல் ஜனித் பெரேரா பிரதான காவல்துறை பரிசோதகர்களாகவும், நுவான் பிரதீப் மற்றும் அஷேன் பண்டார காவல்துறை பரிசோதகர்களாகவும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.