சச்சினின் சாதனையை முறியடித்த படிதார்

சச்சினின் சாதனையை முறியடித்த படிதார்

ஐபிஎல் சீசனின் 34ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் 28 ஓட்டங்களைப் பெற்று பெங்களூர் அணித் தலைவன் ரஜத் படிதார் ஐ.பி.எல் தொடரில் 1000 ஓட்டங்களை கடந்தார்.

இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை படிதார் முறியடித்துள்ளார்.

30 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை படிதார் அடைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் 31 போட்டிகளில் 1000 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ஐ.பி.எல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்தவர்களின் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் (25 போட்டிகளில்) முதல் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெங்களூர் அணிக்காக கோஹ்லி, படிக்கலுக்கு அடுத்தபடியாக 1000 ஓட்டங்களை கடந்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார்.