ட்ராவிட்டின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா

ட்ராவிட்டின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் ராகுல் ட்ராவிட்டின் 48 சதங்கள் என்ற சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் கடந்ததை தொடர்ந்து அவர் குறித்த சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

அத்துடன் குறித்த பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலாவது இடத்திலும் 80 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.