அனைத்து துறைகளுக்கும் ஒரே தலைவர் வேண்டும்- ஷஹிட் அஃப்ரிடி!

அனைத்து துறைகளுக்கும் ஒரே தலைவர் வேண்டும்- ஷஹிட் அஃப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தலைவர் பதவி தொடர்பான முரண்பாடுகளை தடுக்க அனைத்து துறைகளுக்கும் ஒரே தலைவர் என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அணியின் முன்னாள் தலைவர் ஷஹிட் அஃப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் வலியுறுத்தியுள்ளார். 

2023 இல் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் குழுநிலைகளில் இருந்து முன்னேறத் தவறியமையைத் தொடர்ந்து அணித்தலைவர் பாபர் அசாம் மூன்று வடிவங்களுக்குமான தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

தொடர்ந்து, ரி-20 அணிக்கு ஷஹீன் ஷா அப்ரிடியையும் டெஸ்ட் அணித்தலைவராக ஷான் மசூத் ஆகியோரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெயரிட்டது.

இந்தநிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வீரர் ஷஹிட் அஃப்ரிடி செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.