WWE சம்பியனாகி சாதனை படைத்த ஜோன் ஸீனா

WWE சம்பியனாகி சாதனை படைத்த ஜோன் ஸீனா

WWE மல்யுத்தத்தின் இறுதிப்போட்டியில் கோடி ரோட்ஸ் மற்றும் ஜோன் ஸீனா இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில் ஜோன் ஸீனா வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் அவர் 17ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக அரங்கில் WWE மல்யுத்தப் போட்டியில் அதிக முறை சம்பியன் பட்டம் வென்ற பெருமையும் ஜோன் ஸீனாவுக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் ரிக் ப்ளெய்ர் இருக்கிறார்.

இதுவே ஜோன் ஸீனா பங்கேற்கும் கடைசி WWE மல்யுத்த சம்பியன்ஷிப் என்றும் சொல்லப்படுகிறது.