கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அறிமுகப்படுத்திய தமிழ் நடிகை?
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக்கிண்ணத்தை அறிமுகப்படுத்திய நடிகை மீனா கிண்ணத்துடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக்கிண்ணத்தை அறிமுகப்படுத்திய நடிகை மீனா கிண்ணத்துடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகை மீனா “விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று பிரான்ஸ் தலைநகர் பரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்துக்கு முன்பாக நின்று உலகக் கிண்ணத்தை நடிகை மீனா அறிமுகப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் உலக நாடுகள் மோதும் ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக கிண்ணம் 2023ஐ அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை மீனா.
கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு பெரும் துயரில் ஆழ்ந்திருந்த நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று திரண்டு நிகழ்ச்சி நடத்தி உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குழந்தைப் பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் நடிகை மீனா இந்த வயதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாகவும் மூத்த நடிகையாகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், திடீரென உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட கிண்ணத்துடன் நடிகை மீனா நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை மீனாவுக்கும் உலக கிண்ணத்துக்கும் என்ன சம்மந்தம் என ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்விகளை எழுப்பியும், நீங்க எங்கேயோ போயிட்டீங்க மீனா மேடம் என கமெண்ட்டுகளை போட்டு வாழ்த்தியும் வருகின்றனர்.