நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.