சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு!
சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 320 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளாக தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கூறுகிறது.
தொழிற்சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர, இன்று இதனை செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்
நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில், கட்டுமானத் துறையை ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கிய வேளையில், சீமெந்தின் விலையுயர்வு, மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
சீமெந்தின் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என அபேசேகர தெரிவித்துள்ளார்
சீமெந்துக்கு 3வீத வெற் வரி விதிக்கப்பட வேண்டும்.
எனினும் உற்பத்தியாளர்கள் மூன்று சதவீதத்திற்கும் அதிகமான வரியை விதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்