பழங்குடியின பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு! (வைரலாகும் காணொளி)

நியூசிலாந்து பழங்குடியின பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆரவார கோஷம் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து நாடாளுமன்றின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க் என்பவரின் காணொளியே இவ்வாறு வைரலாகி வருகின்றது.

மௌரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்தும் போராடி வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா கோஷத்தை எழுப்பியது அரங்கத்தை அதிர செய்துள்ளது. 

போர், வெற்றி, ஒற்றுமை, இனப் பெருமை என எல்லாவற்றையும் பறைசாற்ற இந்த வழக்கம் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.