விமான விபத்தொன்றில் ஐந்து அரசியல்வாதிகள் உயிரிழப்பு!

கொலம்பிய நாட்டின் மத்திய பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விமான விபத்தொன்றில் ஐந்து அரசியல்வாதிகள் உயிரிழப்பு!

கொலம்பிய நாட்டின் மத்திய பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ரொட்டிகோ கட்சியின் உறுப்பினர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்த போது, விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் அரசியல்வாதிகளுடன் விமானியும் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பில் இடதுசாரி கட்சி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.