துப்பாக்கியால் சுட்டு இருவரை கொலை செய்த பாடசாலை மாணவி!

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பாடசாலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
15 வயதான பாடசாலை மாணவி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மாணவி கண்மூடித்தனமாக சுட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பாடசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.