பங்களாதேஷில் 6 மாடி கட்டடத்தில் பாரிய தீ - 43 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷின் டாக்காவிலுள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.