உயிர்த்த ஞாயிறு நாளில் லண்டனில் சிலுவை சுமந்த தமிழர்கள்!

லண்டன் பாராளுமன்றம் முன்பாகவும் பிரித்தானியா மகாராணி மாளிகை முன்பாகவும் உயிர்த்த ஞாயிறு நாளில் ஒரு விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் எனும் தமிழர்களின் கல்வாரியில் கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட மக்களின் ஆன்மாக்ககளுக்கான உயிர்ப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாகவும் மரணித்த ஒவ்வொரு உயிர்களின் வேண்டுதல்களின் வெளிப்பாடுகளாகவும் அமையப்பெற்ற இவ்விழிப்புணர்வு போராட்டம் வெளிநாட்டவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இயேசுவுக்கு உயிர்ப்பு கிடைத்தது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை தமிழினம் போராடும் என இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.