லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் நடனமாடி அசத்திய சார்லஸ் மன்னர்! வைரலாகும் காணொளி
சார்லஸ் மன்னர் லண்டனில் யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிய காணொளியொன்று வைலராகியுள்ளது.

சார்லஸ் மன்னர் லண்டனில் யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிய காணொளியொன்று வைலராகியுள்ளது.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய மன்னர் 3-ம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.
அந்த வகையில் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் உற்சாகமாக நடனமாடிய காணொளி பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் அந்த காணொளியை பார்வையிட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.