600 இராணுவ வாகனங்களுடன் புடினுக்கு எதிரான மோதலுக்கு பிரித்தானியா தயார்!

600 இராணுவ  வாகனங்களுடன் புடினுக்கு எதிரான மோதலுக்கு பிரித்தானியா தயார்!

600 இராணுவ கவச வாகனங்களுடன் விளாடிமிர் புடினுக்கு எதிரான மோதலுக்கு பிரித்தானியா தயாராகியுள்ளது.

பிரித்தானியாவின் நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் போலந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

600 டிரக் வாகனங்கள்

விளாடிமிர் புடினுக்கு எதிரான மோதலுக்கு பிரித்தானியா தயாராகியுள்ளது. இதற்காக பாரிய நடவடிக்கையை பிரித்தானியா முன்னெடுத்துள்ளது.

Southampton-க்கு அருகில் இருந்து சுமார் 600 டிரக் வாகனங்கள் இரண்டு பாரிய கப்பல்களில் அடைக்கப்பட்டுள்ளன.

சுமார் 1,500 துருப்புகள் நேட்டோ பாதுகாப்பின் ஒரு பகுதியாக வரும் நாட்களில் போலந்திற்கு செல்ல உள்ளனர். 

மேலும் கூட்டணியில் இருந்து 90,000 வீரர்கள் கொண்ட படையின் ஒரு பகுதியை உருவாக்குகிறது, அவர்கள் மே வரை பயிற்சிகளை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. 

ஐரோப்பாவின் நிலைமை மாறிவிட்டது.

போலந்திற்கு செல்வதற்கு முன்பாக 23,000 டன் எடையுள்ள சரக்குக் கப்பலில் கவச வாகனங்கள் ஜேர்மனிக்கு செல்ல தயாராகியுள்ளன.