கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் உயிரிழப்பு!

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக செல்ல முயன்ற 5 பேர் உறைப்பனி காலநிலை காரணமாக, உயிழந்துள்ளதாக பிரான்ஸ் கடல்சார் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் உயிரிழப்பு!

அத்துடன், மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறைப்பனி காலநிலையினால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் அனைவரும், பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயன்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் விமேரெயுக்ஸ் நகரிலிருந்து சிறிய படகு ஒன்றில் பயணிக்க முற்பட்டபோது, அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரான்ஸ் கடல்சார் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.