வட மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஜீவன் தொண்டமான் அவதானம்!
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று (16) இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் முற்பகல் 9 மணி தொடக்கம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், காவல்துறையினர், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் ..