ஈகைப்பேரொளிக்கு வீரவணக்கம்
ஈகப்பேரொளி முருகதாசனின் எஞ்சிய உடற்கூறுகள் புதைக்கபட்ட கல்லறையில் நினைவு வணக்க நிகழ்வு.
சிங்கள பேரினவாத அரசின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்து குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் “ஈகைப்பேரொளி” முருகதாசன் தியாக மரணமடைந்த நாளான 12-02-2023 இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை நடைபெற்றது.
7 பக்கங்களில் “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக வேள்வித்தீயில் சங்கமமாகிய
“ஈகைப்பேரொளி முருகதாசன்” அவர்களின் நினைவான
இந்நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழின உணர்வாளர் முருகானந்தம் அவர்கள் ஏற்றிவைத்தார்
ஈகியர் கல்லறைக்கான மலர்மாலையினை அவரது தந்தையும் தாயாரும் அணிவித்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அங்கு வருகைதந்திருந்த மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவுரையினை மாணவன் அன்புத்தேவன் அவர்கள் வழங்கினார்.
இறுதிப்போரின் போது ஒன்றரைவயது குழந்தையாக முள்ளிவாய்க்காலில் தாம் அகப்பட்டிருந்தபோது தம்மீது ஏவப்படும் கொடிய யுத்தத்ததை நிறுத்தக்கோரி தன்னுடலில் தீமூட்டி தம்முயிரை காத்தவரை நன்றியோடு எண்ணிப்பார்ப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய ஊடகவியலாளரும் முகதாசனின் நண்பருமான திரு.விஜய் அவர்களின் உறுதியுரையுடன் ஈகப்பேரொளி முருதாசன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.