இரு பெண்களை நிர்வாணமாக்கி நடுவீதியில் இழுத்து சென்ற குற்றவாளிகள் தப்ப முடியாது - நரேந்திர மோடி

இரு பெண்களை நிர்வாணமாக்கிய மணிப்பூர் சம்பவம் பாரத நாட்டுக்கே அவமானம் என்றும் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க முடியாது. 

மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனை அளிக்கின்றது.

இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் - மணிப்பூர் பகுதியில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுவீதியில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த அகோரமான சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் திகதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 

தலைநகர் இம்பாலில் இருந்து 35 கிலோ மீற்றர் தொலைவில் கங்போக்பி மாவட்டம் உள்ளது.

சம்பவத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.