விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்கும் இன்னொரு விஷால்!

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்கும் இன்னொரு விஷால்!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் மற்றுமொரு நடிகரான விஷாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே, அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். 

முன்னதாக சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். 

ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்தநிலையில், தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.

வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது அங்குள்ள ரசிகர்களை சந்திப்பதையும், கிராம மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். 

விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.