டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கில் சட்ட பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது!

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கில் சட்ட பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது!

அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழக்கப்படும் சட்ட பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட மாட்டாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் குறித்த குற்றவியல் வழக்கில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் விடுபடுவார் என அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் ஜனாதிபதி பதவியில் இருந்தவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகின்ற போதிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் தன்மை சட்ட பாதுகாப்பு வரம்பை மீறியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக ஒரு சாதாரண அமெரிக்க பிரஜைக்கான அதிகாரங்களுடன் விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தம்மீதான குற்றச்சாட்டுக்களை டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.

அதேநேரம் நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி அவர் மேன்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.