எழுதமிழா 2023 புறுசல்ஸ்
உலகத்தமிழ் இளையோர் அமைப்பினரால் பெல்ஜியம் புறூசல்ஸ் நகரில் ஐரோப்பிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த கவனயீர்ப்பு பேரணியும் பொதுக்கூட்டமும். ஐரோப்பிய மற்றும் ஸ்கன்டினேவிய நாடுகளின் தமிழ் இளையோர்களின் தலைமையிலும் அதே நாடுகளின் தமிழீழச் செயற்பாட்டாளர்களினதும் ஏற்பாட்டிலும் கடும் வெயிலின் மத்தியிலும் மூன்று மணி நேரமாக நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. முள்ளிவாய்க்கால் வாய்க்காலின் சாட்சியங்களாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீதி கேட்டுப் போராடியவர்களும் ஏற்பாட்டாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். தமிழினவழிப்புக்கு நீதி கோரும் போராட்டச் செயற்பாடுகளில் தமது பங்கினை ஆற்ற வேண்டியது ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.