பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மொஹமட் சடேய் அறிவிப்பு!

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மொஹமட் சடேய் அறிவிப்பு!

பாலஸ்தீன பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மொஹமட் சடேய் அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் தமது தலைமையிலான அரசாங்கத்தை கலைத்துவிட்டு புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அவர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், தமது பதவி விலகல் கடிதத்தை, பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸிடம் கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசாங்கம் ஒன்று அமைவதே சிறந்ததாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் தாக்குதலை நடத்தியதை அடுத்து அங்கு ஆயிரத்து 200க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இஸ்ரேல் காசாவில் தொடர்ச்சியாக பதில் தாக்குதலை நடத்தி வருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 90 பேர் காசாவில் கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை 29 ஆயிரத்து 782 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.