குவாத்தமாலாவில் விபத்து; 55 பேர் உயிரிழப்பு!

குவாத்தமாலாவில் விபத்து; 55 பேர் உயிரிழப்பு!

குவாத்தமாலா (Guatemala) தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்தில் 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பஸ் சாலையில் இருந்து விலகி பாலத்தின் கீழே உள்ள செங்குத்தான 115 அடி (35 மீட்டர்) பள்ளத்தாக்கில் அதிகாலையில் விழந்து விபத்துக்குள்ளானதாக அந் நாட்டு தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் எட்வின் வில்லக்ரன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ள குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ, தேசிய துக்க நாளையும் அறிவித்தார்

.