வானில் இருந்து குதித்த 104 வயது பெண் - கின்னஸ் சாதனை!
அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் மூலம் விமானத்தில் இருந்து குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சிகாகோ நகரில் வசிக்கும் டொரோத்தி ஹோஃப்னர் என்ற குறித்த மூதாட்டி வெற்றிகரமாக 4,000 மீட்டர் உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் வயது என்பது வெறும் இலக்கம்தான் என கூறியுள்ளார்.
ஹோப்னர் தனது பயிற்சியாளருடன் வானில் பறந்த காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது