ஜனாதிபதி வேட்பாளருடன் இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ள தயார் : பிரான்ஸில் சிறீதரன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எந்தவொரு வேட்பாளரும், தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வை பெற்று தருவதற்கு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள  தயார் என்றால் அவருக்கு நாம் பகிரங்கமாக ஆதரவளிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் தமிழ் வர்த்தக சங்கத்தினர் நடத்திய நிகழ்வொன்றில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“2005ஆம் ஆண்டு தேர்தலை நாம் புறக்கணித்த போது எங்களுக்கு பக்க பலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சக்தி இருந்தது.

ஆனால், இன்று எங்களிடம் ஒரு சரியான பக்க பலம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்கினால் தென்னிலங்கை அரிசியல்வாதிகள் எங்களிடம் இறங்கி வருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.