ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை வகுப்புகள் ஆரம்பம்!
கடந்த ஓகஸ்ட் 28 ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், வட அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் வகுப்புகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐ.சி.சி.ஆர் மூலமாக முனைவர் த.விஜயலக்ஷ்மி இந்தியாவிலிருந்து அங்கு சென்றுள்ளார்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் மூலம் பத்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ் இருக்கை தலைவர் திரு. சாம் சொக்கலிங்கம் கண்ணப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்திய தூதரக அதிகாரி மஞ்சுநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இந்திய கலாச்சாரம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். பல்கலைக்கழக டீன் ஓ. கானர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முனைவர் த.விஜயலக்ஷ்மி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மாடர்ன் மற்றும் கிளாசிகல் மொழி இயக்குனர் முனைவர் இம்ரான், இந்தியா ஸ்டடிஸ் இயக்குனர், முனைவர். சரசிஜ் மஜூம்தார், முதன்மை கல்வி அலுவலர் முனைவர். மைக்கேல் ஜான்சன், பல்கலைக்கழக வேந்தர், முனைவர். ரேணு கத்தோர், ஹூஸ்டன் தமிழ் இருக்கை இயக்குநர், கால்டுவெல் வேள்நம்பி, செயலாளர் பெருமாள் அண்ணாமலை, எனர்ஜி துறை துணை தலைவர் இயக்குனர், முனைவர். ரமணன் கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர், முனைவர். ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.