ஹமாஸ் - இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை அடுத்த வாரமும் தொடரும்
ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை அடுத்த வாரமும் தொடரும் என எகிப்த்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
4 நாட்கள் பேச்சுவார்த்தையின் பின்னர் எகிப்த்தின் கெய்ரோவில் இருந்து ஹமாஸ் தூதுக்குழு இன்று சென்றுள்ளது.
இஸ்ரேலுடன் உடன்பாடு ஏற்படும் வரையில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடரும்.
காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு ஹமாஸ் தரப்பினரின் கோரிக்கைகள், முட்டுக்கட்டைகளை எட்டியுள்ளன.
எனவே அடுத்த வாரமும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கட்டார் மற்றும் எகிப்தின் நடுநிலைமை கொண்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவுறுத்துவதற்கான இஸ்ரேலின் முயற்சிகள் தோல்வியுற்றுள்ளதாக ஹமாஸ் தரப்பின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.