15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் இன்டெல்!

15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் இன்டெல்!

இன்டெல் நிறுவனம் தொழில்நுட்பத் துறையின் சிப் உற்பத்தியில் தனது போட்டியாளர்களான என்விடியா (NVIDIA) மற்றும் ஏ எம் டி (AMD) உள்ளிட்டவைகளுடனான போட்டியை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் தங்களது அலவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை காரணமாக இன்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களில் 15 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது. இதனை இன்டெல் கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேட் கெல்சிங்கர் அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பணி நீக்கம் தவிர்த்து நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எதிர்பார்த்த வருவாய் இல்லாதது, ஏ.ஐ துறையில் முழுமையான பலன்களை அடையாமல் இருப்பது, செலவீனங்கள் அதிகளவில் இருப்பது உள்ளிட்டவை இன்டெல் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.